Payload Logo
தமிழ்நாடு

பரபரப்பு: ஆட்டு மந்தைகளுடன் குஷ்பு உட்பட பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அடைப்பு.!

Author

gowtham

Date Published

Madurai - Kushboo

மதுரை:அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில் குஷ்புவும் கலந்து கொண்டார். தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் அறிவித்ததால் முன்னதாகவே மதுரையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இருந்தாலும், தடையை மீறி பேரணி செல்லப்பட்டது. அப்பொழுது தீச்சட்டி ஏந்தியும், கண்ணகி வேடமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மிளகாய் இடித்து கண்ணகி சிலைக்கு பூசினர். பின்னர், இதற்கு அனுமதி இல்லை என்று கூறி பேரணி நடத்திய குஷ்பு உட்பட மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக, அதிமுக, நாதக இதுபோல் போராட்டம் நடத்தினர் பின்பு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தற்பொழுது, போலீசாரால் கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் 'ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில்' ஆடுகள் அடைக்கும் வளாகத்தில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவ நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட போது, அருகில் உள்ள ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஏற்கெனவே ஆடுகள் இருந்த நிலையில், மண்டபத்துக்குள் பாஜகவினர் தங்க வைக்கப்பட்ட பின்னரும் வெளியே இருந்து  கூட்டமாக செம்மறி ஆடுகள் மண்டபத்துக்குள் கொண்டு வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, அங்கு ஆட்டு கழிவுகளால் துர்நாற்றமும் வீசியதால், குஷ்பு மற்றும் பாஜகவினர் தங்களை வேறு மண்டபத்துக்கு வேறு மண்டபத்துக்குள் இருந்து கோஷமிட்டனர். மேலும், வேண்டுமென்றே ஆடுகள் அடைக்கப்படும் மண்டபத்தில் தங்களை அடைத்து அவமானப்படுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.