Payload Logo
தொழிநுட்பம்

12 மணிக்கு பர்த்டே விஷ்....இன்ஸ்டாகிராம் கொண்டு வந்த பக்கா அப்டேட்!

Author

Bala

Date Published


மும்பை : பலரும் உபயோகம் செய்து வரும் இன்ஸ்டாவில் அடிக்கடி நல்ல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, மெசேஜை Schedule செய்து வைத்துக்கொள்ளலாம் அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் காதல் செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

ஏனென்றால், நமக்கு பிடித்த நபரின் பிறந்த நாள் அன்று சரியாக 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லவேண்டும் என்றால் சில சமயங்களில் துக்கம் வந்து உறங்கிவிடுவோம். இதனால் நம்மளுடைய பிறந்த நாள் வாழ்த்து அந்த நபருக்கு ஸ்பெஷலானதாக இருக்காது. எனவே, இனிமேல் தூங்கினால் கூட பிரச்சினை இல்லை நாம் Schedule செய்து வைத்துக்கொள்ளலாம்.

அப்படி மெசேஜை Schedule செய்து வைத்துக்கொள்ளும் அசத்தலான அப்டேட்டை தான் இன்ஸ்டாகிராம் கொண்டுவந்திருக்கிறது. மெசேஜ் டைப் செய்துவிட்டு Send பட்டனை Long Press செய்தால் Schedule ஆப்ஷன் காட்டும். அதில் தேதி மற்றும் நேரத்தைக் குறித்துக்கொள்ளலாம். இனிமேல் நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்த நாள் 12 மணிக்கு தெரிவித்து கொள்ளலாம். இப்படியான ஒரு அட்டகாசன அப்டேட்டை கொண்டுவந்துள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த அசத்தலான அப்டேட்டை தொடர்ந்து அடுத்ததாக மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் நம்மளுடைய பின்தொடர்போருடைய Username-க்கு பதிலாக ‘செல்லப்பெயர்’ வைக்கும் அம்சத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.