Payload Logo
தமிழ்நாடு

மாடுபிடி வீரர்கள் கவனத்திற்கு! விண்ணப்பம் செய்ய இன்று தான் கடைசி நாள்!

Author

bala

Date Published

jallikattu 2025 application

சென்னை :பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள். 2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 4 அன்று  புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து,  மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி 14 முதல் 16 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.அவனியாபுரத்தில் வரும் 14-ந்தேதி , 15-ந்தேதி பாலமேடு, 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் நேற்றே தொடங்கியது. பலரும், அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்பம் செய்து வருகிறார்கள்.

விளையாட விண்ணப்பம் செய்வது எப்படி?

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவுபெறவுள்ளது. மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம் அதற்கு மேல் விண்ணப்பம் செய்யமுடியாது என்பதால் விவரவாக விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.