Payload Logo
Untitled category

எப்பேர்ப்பட்ட சளியா இருந்தாலும் சரி இந்த வெற்றிலை குழம்பு போதும்..!

Author

k palaniammal

Date Published

betal leaf

வெற்றிலை குழம்பு - வெற்றிலை என்றாலே நாம் தாத்தா பாட்டிக்கு தொடர்புடையது என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் இதில் ஒளிந்திருக்கும் நன்மைகளோ ஏராளம். வெற்றிலைப் போட்டால் பற்கள் கரையாகிவிடும் என பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள் இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை .வெற்றிலை வைத்து குழம்பு சூப்பரா செய்யலாம்.. அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

செய்முறை:ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு ,சின்ன வெங்காயம் ,பூண்டு, தக்காளி, வெற்றிலை ஆகியவற்றை வதக்கி,ஆற வைத்துக் அரைத்து  கொள்ளவும் .பின்பு அதே பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான சீரகம் மற்றும் மிளகு சேர்த்து பின்பு நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்கவும்.

இப்போது அரைத்த விழுதையும் சேர்த்து புளி  கரைசலையும் கலந்து விட்டு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி விடவும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போய் எண்ணெய்  பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது வெற்றிலையின் வாசத்தோடு ஆரோக்கியமான வெற்றிலை குழம்பு ரெடி.

வெற்றிலையில் உள்ள சத்துக்கள்:விட்டமின் சி, நியாசின் ,தையமின்,ரிபோபிளேவின்  , கரோட்டின், கால்சியம், இரும்பு சத்து போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

வெற்றிலையை பயன்படுத்தும் முறை:வெற்றிலையை பயன்படுத்தும் போது அதன் காம்பு, நுனிப்பகுதி ,நடு நரம்பு பகுதி ஆகியவற்றை நீக்கி தான் பயன்படுத்த வேண்டும்.

பயன்கள்:வயிற்றுப் பகுதியில் உள்ள வாயுக்களை வெளித்தள்ள கூடியது இந்த வெற்றிலை குடல் இயக்கத்தை சீர்படுத்துகிறது ,நல்ல ஜீரண சக்தியை கொடுக்கிறது .

வெற்றிலையும், குழந்தைகளும்;

வாய்ப்பகுதி:வெற்றிலையை மெல்லும்போது வாயில் உள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது.வெற்றிலையுடன் புகையிலை சேர்த்து சாப்பிட்டால் அது வாய் புற்றுநோயை ஏற்படுத்தும். இதனால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் தான் வெற்றிலை போடும் பழக்கம் அதிகம் உள்ளது. உணவுக்குப் பின் வெற்றிலை போடுவதை ஒரு பழக்கமாகவே நம் வீட்டில் பெரியவர்கள் கடைபிடிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கடவுள் வழிபாட்டிற்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே இந்த வெற்றிலையை ஒரு நாளைக்கு 5 லிருந்து 6 வரை ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்னும் பயன்படுத்தி  வந்தால் அதன் பலனை பெறலாம் .