Payload Logo
Untitled category

அடேங்கப்பா! பாகற்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

Author

k palaniammal

Date Published

bitter gourd

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காத காய்கறி  குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் இதன் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளது அது என்னவென்றும்  யார் சாப்பிடக்கூடாது என்றும் எந்த உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கசப்பாக இருந்தாலும் ஒரு பொருளை நம் முன்னோர்கள் உணவாக மாற்றி சாப்பிட்டார்கள்  என்றால் அதில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறைபூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்காத பாகற்காயாக இருந்தால் ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். உணவுக்கு முன் காலை  30 எம் எல் எடுத்துக் கொள்ளலாம்.

பாகற்காயுடன் சேரக்கூடாத உணவுகள்ஒரு சிலருக்கு தயிருடன்  பாகற்காயை சேர்த்தால் ஒவ்வாமை ஏற்படும் இவர்கள் தவிர்க்கவும். சித்தா , ஆயுர்வேத மருந்துகள் எடுக்கும் போதும் தவிர்க்கவும். ஏனெனில் பாகற்காய், மருந்துகளின் வீரியத்தை குறைக்கும். மேலும் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளும் போதும் பாகற்காய் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் தவிர்த்துக் கொள்ளலாம், மற்றபடி பாகற்காய் அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த காய்கறி.

பாகற்காயை சமைக்கும் போது அதன் கசப்பு சுவை மாற இனிப்பு சேர்த்து செய்வதை தவிர்க்கவும். பாகற்காயின்   இயற்கை சுவையுடன் எடுத்துக் கொண்டால்தான் அதன் முழு பலனையும் நம்மால் பெற முடியும். எனவே வாரத்தில் இரண்டு முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்து அதன் நற்பலன்களை பெறுவோம்.