Payload Logo
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: பண்டிற்கு காயம் ... இந்திய அணி சார்பாக விளையாட உள்ள வீரர்கள் இவர்களா?

Author

gowtham

Date Published

INDIAN squad for the Champions Trophy

துபாய் :ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியுடன் நாளை (பிப்ரவரி 19 ஆம் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 20 அன்று இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஒரு போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் யார் விளையாடுவார்கள் என்று கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப், ஷமி அணியில் இடம்பெறுவார்கள் என்றும், ஆல் ரவுண்டர் பட்டியலில் பாண்டியா, ஜடேஜா இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்தியாவின் வெற்றி வாய்ப்புகளுக்கு பெரும் அடியாகும். சிறந்த பந்து வீச்சாளராக பார்க்கப்படும் 31 வயதான அவர் முதுகுவலி காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இதனிடையே, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து மைதானத்தில் நின்று கொண்டிருந்த ரிஷப் பண்டின் காலில் வேகமாக தாக்கியது. இதனால் அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து வலியால் துடித்தார்.

இதனையடுத்து சக வீரர்கள், மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஓய்வறைக்கு அழைத்து சென்றனர். இன்னும் காயத்தின் முழுமையான தன்மை குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவர் விளையாடுவாரா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்தியா அணி அணி விவரம்:

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது. ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.