தமிழ்நாடு
வடம் இழுத்த அண்ணாமலை... அறுந்த கயிறு... பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!
Author
gowtham
Date Published

கோவை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
அப்போது கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று அவர் வடம் இழுத்தார். இரு தரப்பும் போட்டிப்போட்டு கயிறை இழுத்த நிலையில், அண்ணாமலை பக்கம் இருந்த கயிறு சட்டென அறுந்தது.
இதில் அண்ணாமலையுடன் இருந்த பாஜகவினர் கீழே விழுந்தனர். அண்ணாமலை தடுமாறி கீழே விழ போன போது, அவரை பாதுகாவலர்கள் தாங்கி பிடித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown node