அண்ணா பல்கலை. விவகாரம் - அதிமுக கேவியட் மனு தாக்கல்!
Author
gowtham
Date Published

சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், இந்த வழக்கில் சார் என்ற நபரை, மாணவி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த 'சார்' யார் என்பது இன்று வரை தெரியா புதிரா இருந்து வருகிறது. இதனால், அவர் யார் என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதனால், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது அதிமுக. ஆம், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்கு ஏதேனும் தொடர்ந்தால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என அதிமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.