தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா... தீயாக வேலை செய்யும் ஆனந்த் - ஆதவ் அர்ஜுனா.!
Author
gowtham
Date Published

சென்னை :தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள் அரங்கில் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) காலை 7.45 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், தலைவர் விஜய், தேர்தல் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் ஆலோசகர்கள் பிரசாந்த் கிஷோர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் 2026 தேர்தலுக்கான வியூகம், யுக்திகள், அரசியல் ரகசியங்கள் பற்றி பேசி கலந்தாலோசிக்க இருப்பதால் இந்த விழா பொது வெளி கூட்டமாக அமையாமல் உள்ளரங்க கூட்டமாக நடைபெறும்.
விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு, விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விழா அரங்கத்தை பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மூவரும் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விஜய்யை வரவேற்க, ஈ.சி.ஆரில் பிரமாண்ட பேனர்களை தொண்டர்கள் வைத்து வருகிறார்கள். விழுப்புரத்தில் நடந்த மாநாடு களப்பணியை N.ஆனந்த் ஒற்றை ஆளாக சமாளித்து கொண்டிருந்தார். இப்பொழுது, புஸ்ஸி N.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இணைந்து தீயாக வேலை செய்து வருகிறார்கள்.
unknown nodeதற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள 95 மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600 பேர் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் பங்கேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த கூட்டம் முழுக்க, முழுக்க 2026 தேர்தல் வியூகத்தை மேற்கொள்வதற்கான கூட்டமாகவே அமைய இருக்கிறது.