Payload Logo
தொழில்நுட்பம்

பயனர்களுக்கு தூண்டில் போட்ட அம்பானி! ஜியோ ஹாட்ஸ்டார் திட்டங்கள் என்னென்ன தெரியுமா?

Author

bala

Date Published

ambani jio hotstar

சென்னை :இந்தியாவில் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக இருந்த ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரண்டு ஒன்றாக இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்கிற தளமாக உருவாகியுள்ளது. எனவே, இதற்கு முன்பு இரண்டு தளங்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பானதோ அது அனைத்துமே இனிமேல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

இந்த தளத்தில் என்னென்ன விலைக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறது என்பது பற்றி விவரமும் வெளிவந்து இருக்கிறது. அது பற்றி விவரமாக பார்ப்போம்.

ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டம் (JioHotstar Mobile Plan)

ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர் திட்டம் (JioHotstar Super Plan)

ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டம் (JioHotstar Premium Plan)

ஏற்கனவே ஹாட்ஸ்டார் தளத்தில் சந்தா வைத்திருப்பவர்கள் அது காலாவதியான தேதி வரை அதே திட்டத்தை பயன்படுத்தலாம். அதைப்போல, ஜியோ சினிமா தளத்தை  இலவசமாக பயன்படுத்தியவர்கள், புதிய திட்டங்களில்  மாற்றங்களும் வரும் வரை அதை தொடர முடியும் பதிய சந்தா திட்டங்கள் மார்ச் 2025 முதல் ஜியோ ஹாட்ஸ்டார்  பயன்பாட்டில் கிடைக்கும்.

மேலும், இந்த முறை ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ளது. எனவே, இதுவரை ஐபிஎல் போட்டிகள் இலவசமாக ஜியோ சினிமாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது சந்தா கட்டி தான் பார்க்கவேண்டும் என்கிற சூழல் நிலவியுள்ளது.

சந்தா கட்டும் பயன்பாடு மார்ச் மாதம் தான் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளும் வரும் மார்ச் 21-ஆம் தேதி தான் துவங்குகிறது. எனவே, இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அம்பானி மாஸ்டர் பிளான் செய்து இப்படியான திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே, இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வசதியை கொடுத்து ஜியோ சினிமா ஓடிடி தளத்தை அதிகமானோர் பதிவிறக்கம் செய்ய வைத்தார்.

இப்போது, அதனை ஹாட்ஸ்டாருடன் இணைத்து மார்ச் மாதம் முதல் சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தால் ஐபிஎல் பார்க்கும் விரும்பிகள் நிச்சயமாக சந்தா செலுத்துவார்கள் என திட்டமிட்டு அம்பானி தனது தொழில் திட்டத்தை திட்டியிருப்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.