Payload Logo
திரைப்பிரபலங்கள்

அமரன் கொடுத்த அமோக வெற்றி! பான் இந்தியா படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி!

Author

bala

Date Published

Dir Rajkumar Periasamy

சென்னை :அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவருக்கு தொடர்ச்சியாக பெரிய பெரிய ஹீரோக்களிடம் இருந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டும் வருகிறது.

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்குகிறார். இந்தத் திரைப்படம் அமரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே எடுக்கப்பட வேண்டிய ஒரு திரைப்படம்.  ஆனால் தனுஷும் அந்த சமயம் பிஸியாக இருந்த காரணத்தினால் இருவராலும் இணைந்து இந்த திரைப்படத்தை எடுக்க முடியாமல் போனது.

அதன் பிறகு அமரன் எனும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு தனுஷ் கால் செய்து நீங்கள் முன்பு சொன்ன கதையை இப்போது பாடமாக செய்யலாம் என கூறி வாய்ப்பு கொடுத்தார். எனவே அமரன் படத்தை தொடர்ந்து அவர் தனுஷை வைத்து எந்த மாதிரி திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

இந்த சூழலில், தற்போது தனுஷ் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமிக்கு பான் இந்தியா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தும் பின் (2001), பியார் கா பஞ்ச்நாமா 2, ராஸ் ரீபூட் உள்ளிட்ட பெரிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பூஷன் குமார் ராஜ்குமார் பெரிய சாமியை நேரில் கதை ஒன்றை கூறி இந்த கதையை நீங்கள் இயக்கவேண்டும். நான் தயாரிக்கிறேன் என கூறி இருக்கிறார்.

இவர்கள் இணையவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, ராஜ்குமார் பெரியசாமி வளர்ச்சிக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.