நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? - திருமாவளவன் கேள்வி.!
Author
gowtham
Date Published

இராணிப்பேட்டை :விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது, தமிழக அரசியல் களத்தில் சமீபத்திய விவாதங்களை கிளப்பியுள்ளது. விசிக சார்பில் இராணிப்பேட்டையில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார்.
அப்பொழுது, தொண்டர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், ''நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் என்னை முதல்வர் ஆக்குங்கள் என மக்களிடம் கேட்கிறார்கள். நான் 25 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் இருக்கேன் முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா? என தொண்டர்களை நோக்கி திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் வேணாம்மானு என்னையே கேட்கிறார்கள். எனக்கு கோபம் வருமா? வராதா? ஏன்... நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? யார் யாரோ கிளம்புறான்.. நானும் ரௌடி நானும் ரௌடின்னு..
எல்லோரும் வந்து என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்னு கேட்கும்போது.. நான் 35 வருஷ பொது வாழ்க்கையில் இருக்கிறேன். எனக்கு என்ன தகுதி இல்லை. ஏன் என்னை துணை முதலமைச்சர்னு சொல்றீங்க. ஆசை காட்டுனா நான் போயிருவேன்னு நினைக்கிறாங்க'' என்று பேசியிருக்கிறார்.