Payload Logo
Untitled category

ஒளிந்திருந்து தாக்கும் அக்கி நோய்..! இதோ அதற்கான தீர்வு..!

Author

k palaniammal

Date Published

shingles diseases

அக்கி நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே தாக்கும் ஒரு தொற்று. இது ஏன் வருகிறது மற்றும் அதற்கான தீர்வு.. பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

காரணங்கள் :அக்கி நோய் என்பது அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடியது. ஒருவர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு முழுமையாக குணமடையாமல் நரம்புகளிலேயே ஒளிந்திருக்கும், பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறு சிறு பனி கொப்பளங்களாக தோன்றும் அதாவது வாய் சுற்றி அல்லது முதுகுப்பகுதி, தோள்பட்டை போன்ற பகுதிகளில் ஏற்படுவதே அக்கி நோய் ஆகும். இது அதிக வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.

சிகிச்சை முறை :கிராமப்புறங்களில் அக்கி எழுதுதல் என இதற்கெனவே ஒருவர் இருப்பார்கள். இந்த அக்கிக்கு காவிகல் பூச்சை அக்கி மீது தடவுவார்கள். இது ஒரு  மண் வகையை சேர்ந்தது. அறிவியல் பூர்வமாக இதை பற்றி கூற வேண்டும் என்றால் மண்ணில் சிங்க் (Zinc) அதிகம் இருக்கும். எனவே இதில் உள்ள சிங்க் அந்த கொப்பளத்தில் உள்ள நீரை உறிஞ்சி மற்ற இடத்தில் பரவாமல் தடுக்கும். இந்த கொப்புளங்கள் உடைந்தால் அந்த நீர் பட்ட இடமெல்லாம் கொப்பளம் தோன்றும் .

இந்த காவிகல் பூச்சி அனைவருக்குமே பலன் கொடுக்கும் என கூற முடியாது. அதனால் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கான மருந்து ஆறு நாட்கள் கொடுக்கப்படும். நாம் மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டால் அந்த கொப்பளங்கள் மறைந்த பின்னும்  முதுகு வலி  போன்றவை அதிகமாக இருக்கும் இதை தவிர்க்க வேண்டும் என்றால் நாம் மருத்துவ சிகிச்சை பெறுவதே சிறந்த முறையாகும். வேப்ப இலை மற்றும் மஞ்சளையும் அக்கி உள்ள இடங்களில் பூசலாம்.

உணவு முறை :இதற்கு தீர்வாக அதிகமாக நீர் ஆகாரம் மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் கார வகைகளை குறைத்து இளநீர் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே நம் உடலில்  நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி பாதுகாத்து கொள்வோம்.