Payload Logo
கிரிக்கெட்

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

Author

bala

Date Published

Jofra Archer Ibrahim Zadran

லாகூர் :2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. தொடக்கத்தில் அருமையாக நமக்கு தொடக்கம் கிடைக்கும் என ஆப்கானிஸ்தான் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் தலையில் இடியை போடும் வகையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சம்பவம் ஒன்றை செய்தார்.

அணியின்  முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 6, செடிகுல்லா அடல் 4, ரஹ்மத் ஷா 4, ஆகிய மூன்று பேருடைய விக்கெட்களையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீழ்த்தினார். இதனால் ஒரு கட்டத்தில் 8.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்து ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. அந்த சமயம் எதற்கு பயம் நான் இருக்கிறேன் என அணியை இப்ராஹிம் சத்ரான் தனது தோளில் சுமந்து கொண்டு அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார்.

அதிரடி கலந்த நிதானத்துடன் விளையாடி வந்த அவருடைய பேட்டிங் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு ரன்கள் சேர்ந்தது. அவருடன் இணைந்து ஆப் : அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 40 மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் 41 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் சதம் விளாசி இப்ராஹிம் சத்ரான் களத்தில் நின்று கொண்டு இருந்தார். தொடக்கத்தில் சறுகி அதனப்பிறகு சூப்பரான கம்பேக் கொடுத்த காரணத்தால் 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி குவித்தது.

அடுத்ததாக, மீதமிருந்த 10 ஓவர்களில் எத்தனை ரன்கள் எடுக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், சதம் விளாசிய இப்ராஹிம் சத்ரான்  தனது கியரை முழுவதுமாக அதிரடிக்கு மாற்றி சிக்ஸர்கள் பவுண்டரிகள் என அடித்து விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவர் 150 ரன்களையும் கடந்தார்.

இவர் ஒரு பக்கம் அதிரடியாக விளையாட மற்றொறு பக்கம் முகமது நபியும் அசத்தலாக விளையாடினார். தேவையான சமயத்தில்  40 ரன்கள் எடுத்துக்கொடுத்து ஆட்டமிழந்தார்.  இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் இவ்வளவு ரன்கள் ஆப்கானிஸ்தான் அடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்ராஹிம் சத்ரான் அதிரடியால் எதிர்பார்த்த  ரன்கள் அணிக்கு கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4, லிவிங்ஸ்டன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.