Payload Logo
சினிமா

"ஒரு நல்ல படத்துக்கு அடையாளம்"... திரு.மாணிக்கம் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

Author

gowtham

Date Published

ThiruManickam Rajinikanth

சென்னை:நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி தவிர பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேசி, சாம்ஸ், ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார், அறிக்கை வாயிலாக தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ரஜினி வெளியிட்ட அந்த அறிக்கையில், "ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும்.

அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த "திரு.மாணிக்கம்" என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தைவைத்து திரைக்கதை வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள், தான் ஓர் அற்புதமான இயக்குனர் என்பதை நிருபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு அவர்களுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் G.P.ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node