Payload Logo
சினிமா

நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்!

Author

gowtham

Date Published

Good Bad Ugly

சென்னை:இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். அதன்படி, குட் பேட் அக்லி படக்குழு தமிழ் புத்தாண்டை குறிவைத்துள்ளதாக தெரிகிறது.

அதாவது, திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு என்பதால், படம் ஏப்ரல் 10-ம் தேதி (வியாழன்) அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக, அஜித்தின் 'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு வெளியாக இருந்ததால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் ஏப்ரலில்தான் போல் தெரிகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, ராகுல் தேவ், யோகி பாபு மற்றும் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் அஜீத் தனது பணியை முடித்த உடன் டப்பிங் பணி தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி தவிர, தனுஷ் இயக்கிய இட்லி கடையும் அன்று தான் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node