விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்... தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
Author
gowtham
Date Published

சென்னை :பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் திடீரென குழந்தை அணியக்கூடிய செருப்பை விஜயின் வீட்டிற்குள் வீசினார். பின்னர், உடனடியாக அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, மாமல்லபுரத்தில் விஜய் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விஜய் தனது வீட்டில் இருந்து புறப்படவிருக்கும் நிலையில், இவ்வாறான செயல் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் இந்த விழாவில், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் , தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
காலை 10 மணிக்கு மேல் தொடங்கவிருக்கும் இந்த விழாவில், 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும், தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக தவெக தலைவர் விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளது.