Payload Logo
வானிலை

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.!

Author

gowtham

Date Published

TN Rain

சென்னை :நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவியது.

இது, இன்று காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காலை மேற்கு வங்காள வங்கதேச கரையை கடந்து, மேற்கு வங்காள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் வங்கதேச கடலோரப்பகுதிகளில் நிலவகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், இன்றைய தினம் நீலகிரி, கோவை தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஜூலை 25) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை (ஜூலை 26) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.