அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை! 5 இந்திய வம்சாவளியினர் அதிரடி கைது!
Author
manikandan
Date Published

நியூ யார்க் :குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் அமெரிக்க அரசிடம் புகார் அளித்து இருந்தனர். இறுதியாக நியூ யார்க் மாகாணம் ஓசோன் பகுதி பூங்காவில் 2024, அக்டோபர் 22ஆம் தேதியன்று அவர் காணப்பட்டார் என கூறப்பட்டது.
இதனை அடுத்து, அமெரிக்க FBI தீவிர சோதனை மேற்கொண்டது. அதில், நியூ ஜெர்சி மாகாணத்தில் மான்செஸ்டர் பகுதியில், கடந்த டிசம்பர் 14, 2024-ல் ஒரு உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல் குல்தீப் குமார் உடல் என்றும், அவர் மார்பு பகுதியில் பல்வேறு இடங்களில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து FBI வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி, முதற்கட்ட விசாரணையில் இந்தியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் வைத்து சௌரவ் குமார் (வயது 23), கௌரவ் சிங் (வயது 27), நிர்மல் சிங் (வயது 30), குர்தீப் சிங் (வயது 22) டிசம்பர் 20, 2024-ல் கைது செய்யப்பட்டு அவர்கள் ஜான்சி கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 3ஆம் தேதி, நியூயார்க் மாகாணத்தின் சவுத் ஓசோன் பூங்காவைச் சேர்ந்த சந்தீப் குமார் (வயது 34) என்பவரை FBI கைது செய்தனர்.
வெவ்வேறு சிறைகளில் நீதிமன்ற காவலில் உள்ள இவர்களை FBI விசாரணைக்காக நியூ ஜெர்சி சிறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என குல்தீப் குமார் வழக்கறிஞர் நியூயார்க் செய்தி நிறுவனங்களில் தெரிவித்துள்ளார்.