அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு : தவெக, நாதக உட்பட 45 கட்சிகளின் விவரம் இதோ...
Author
manikandan
Date Published

சென்னை :மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதாவது, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தீவிரமாக ஈடுபட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது மறுசீரமைப்பு செய்தால் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருக்கிறது என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறையும் வாய்ப்பு இருக்கிறது என்றும், ஒருவேளை தொகுதி எண்ணிக்கை 848ஆக அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய 22 தொகுதிகளுக்கு பதிலாக 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
இதனை குறிப்பிட்டு நேற்று, அடுத்தமாதம் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். இதுபற்றி கலந்து ஆலோசிக்க தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வருடம் கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும் அதனை செயல்படுத்தும் முனைப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகள் :
இந்த அனைத்துக்கட்சி கூட்டமானது வரும் மார்ச் 5ஆம் தேதியன்று, காலை 10 மணியாவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தள கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.