பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!
Author
gowtham
Date Published

ஒடிசா :ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி இன்று (ஜூன் 29, 2025) ஜெகந்நாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை குண்டிச்சா கோயில் அருகே ஜெகன்நாதர் தேர் வந்தபோது| ஏற்பட்ட இந்த நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நெரிசலுக்குப் பிறகு, ஒடிசா அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பூரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியை இடமாற்றம் செயப்பட்டு, மேலும் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக டிசிபி விஷ்ணு பதி மற்றும் கமாண்டன்ட் அஜய் பதி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனுடன், கூட்ட நெரிசலில் இறந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசல் ஏன் ஏற்பட்டது மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பாக மேம்பாட்டு ஆணையரின் மேற்பார்வையில் விரிவான நிர்வாக விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது, பூரியில் புதிய மாவட்ட ஆட்சியராக சஞ்சல் ராணா நியமிக்கப்பட்டுள்ளார், புதிய எஸ்பியாக பினாக் மிஸ்ரா பொறுப்பேற்றுள்ளார்.