Payload Logo
கிரிக்கெட்

WTC Final : தென்னாப்பிரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் மார்க்ராம்! சதம் விளாசி படைத்த சாதனைகள்!

Author

bala

Date Published

aiden markram

லண்டன் :உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக ஆஸி அணி 74 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

அதன்பிறகு, தங்களுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸி 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எனவே, 281 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 282 எடுத்தால் வெற்றி என்ற இலக்கு அமைந்தது. வெற்றிபெறவேண்டும் என இரண்டாவது இன்னிங்ஸை தென்னாப்பிரிக்கா அணி நிதானமாக தொடங்கியது.ஐடன் மார்க்ராம் சதம் (102*)இந்த போட்டி சற்று மெதுவாக செல்லும் என ஆஸி அணி எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் போட்டியை நான் ஒருவனே நின்று முடித்துக்கொடுக்க போகிறேன் என்கிற வகையில் தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ராம் விளையாடி சதம் விளாசியுள்ளார். இன்னும் கோப்பையை வெல்ல அணிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் போட்டி உள்ளது. மூன்றாவது நாள் நேற்று முடிந்த நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை தென்னாப்பிரிக்க  அணி எடுத்துள்ளது.

எனவே, இன்று 4-வது நாள் தொடங்கவிருக்கும் நிலையில் இன்றே போட்டியை தென்னாப்பிரிக்க அணி முடித்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெற்றி பெற்றால் அணியின் வெற்றிக்கு ஐடன் மார்க்ராம் காரணமாகவும் இருப்பார். அந்த அளவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதை கொண்டு சென்றுள்ளார். அதே சமயம், இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் அவர் சில சாதனைகளையும் படைத்திருக்கிறார். அது என்னென்ன சாதனைகள் என்பதை பார்ப்போம்.ஐடன் மார்க்ராம் படைத்த சாதனைகள்மார்க்ராம் WTC இறுதிப்போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் 156 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 102* (நாட்அவுட்) ரன்கள் எடுத்து, ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் (WTC, உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.

மார்க்ராம், WTC இறுதிப்போட்டியில் சதமடித்த மூன்றாவது வீரராக ஆனார். இதற்கு முன், 2021-23 WTC இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (121) மற்றும் டிராவிஸ் ஹெட் (163) ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக (ஓவல் மைதானம்) சதமடித்திருந்தன.

இந்தப் போட்டியில் மார்க்ராம் ஒரு சதம் அடித்ததோடு, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உட்பட இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம், இங்கிலாந்தில் ஒரே டெஸ்ட் போட்டியில் சதமடித்து விக்கெட் எடுத்த ஐந்தாவது தென்னாப்பிரிக்க வீரராக ஆனார். இவருக்கு முன், புரூஸ் மிட்செல் (1935, ஓவல்), கிரேம் பொல்லாக் (1965, ட்ரெண்ட் பிரிட்ஜ்), மற்றும் ஜாக் காலிஸ் (1998, ஓல்ட் ட்ராஃபோர்ட்; 2012, ஓவல்) ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.