12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!
Author
gowtham
Date Published

டெல்லி :இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறும் இந்தப் போட்டியின் 13வது பதிப்பாகும். இந்தியாவில் 3 நகரங்களிலும், இலங்கையில் 2 நகரங்களிலும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக நுழையும். அவர்கள் 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் இங்கிலாந்தை தோற்கடித்து கடைசியாக பெண்கள் உலகக் கோப்பையை வென்றனர். இந்தப் போட்டியின் வரலாற்றில் ஆஸ்திரேலியா மிகவும் வெற்றிகரமான அணியாகும், ஏழு முறை பட்டத்தை வென்றுள்ளது.
உலகக் கோப்பை செப்டம்பர் 30 ஆம் தேதி பெங்களூருவில் இந்தியாவின் போட்டியுடன் தொடங்கும், இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29 ஆம் தேதி குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி அக்டோபர் 30 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு அல்லது கொழும்பில் நடைபெறும்.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இரு அணிகளுக்கும் பட்டப் போட்டிக்கு குறைந்தது இரண்டு நாட்கள் அவகாசம் கிடைக்கும். இது 12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெறுவதை குறிக்கிறது. இதற்கு முன், கடைசியாக இந்தியாவில் 2013ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஇதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அடங்கும்.