Payload Logo
தமிழ்நாடு

முடிவுக்கு வருமா மோதல்? ராமதாஸை சந்திக்க தோட்டத்திற்கு செல்லும் அன்புமணி!

Author

bala

Date Published

ramadoss and anbumani

சென்னை :பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருந்த சூழ்நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது.

ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? எனவே நான் சொல்வது தான் செல்லும் என கூறி வருகிறார்.

இப்படியான பரபரப்பான சூழலில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இருவரும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை அன்புமணி சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்துக்கு புறப்பட்டார். எனவே,இவர்களுடைய இந்தச் சந்திப்பு கட்சியின் உட்கட்சி பூசல்களை முடிவுக்கு கொண்டுவருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தச் சந்திப்பு, தந்தை-மகன் இடையேயான மனக்கசப்பை தீர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பாமகவின் எதிர்கால வெற்றிக்கு இரு தலைவர்களின் ஒற்றுமை அவசியம் என்பதால், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அன்புமணி, தனது தந்தையுடன் நேரடியாக பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வார் என நம்பப்படுகிறது. இருவரும் ஒருமித்த கருத்துக்கு வந்தால், கட்சி மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மாறாக, மோதல் தொடர்ந்தால் சரியாக இருக்காது என கட்சியின் நிர்வாகிகள் யோசிக்கிறார்கள்.