கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? - தமிழிசை சௌந்தரராஜன்.!
Author
gowtham
Date Published

சென்னை :நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்து, கன்னட மொழி மற்றும் கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கருதப்பட்டு, கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தற்பொழுது, கர்நாடக நீதிபதி உட்பட முதலமைச்சர் என பலரும் இந்த விவகாரத்தில் 'வரலாற்று உண்மையை ஏற்க மறுத்து கமல்ஹாசன் மண்ணிப்பு கேட்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தது வருகிறார்கள். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட மாட்டோம், ஒரு வார காலம் அவகாசம் வேண்டும்" என கமல் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். இப்பொழுது, இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.
ஆனால், கன்னட மொழி விவகாரத்தில் கமல் பேசியது தேவையற்றது, கடிதம் எழுதுவதற்கு பதில் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நமது தன்னலமற்ற ராணுவம் தேசத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள்.
அன்பு மன்னிப்பு கேட்காது என கூறிவிட்டு, நீண்ட கடிதம் எழுதுவதற்கு பதிலாக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்கு இதில் என்ன ஈகோ? அதற்கு பதிலாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தவறு செய்துள்ளார்." என்று கூறியிருக்கிறார்.