Payload Logo
இந்தியா

ஒரே ஒரு ஆட்டோ மாசம் ஓஹோ சம்பாத்தியம்.., லட்சம் வருமானம் பார்க்கும் ஓட்டுநர்.! அப்படி என்ன செய்கிறார்?

Author

gowtham

Date Published

auto driver

மும்பை :ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கதையை கேட்டால் தலையே சுத்திவிடும். அதுவும் ஆட்டோ ஓட்டாமலேயே, மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டுகிறாராம்.

அட ஆமாங்க... மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5-8 லட்சம் சம்பாதிக்கிறார். அமெரிக்க தூதரகத்திற்கு வரும் விசா விண்ணப்பதாரர்கள், உள்ளே பைகளை கொண்டு செல்ல முடியாததால், அந்த பைகளை வைத்திருக்க ஏதாவது இடம் தேடுகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தனது ஆட்டோவை வைத்து, "Bag-Holding Service" என்கிற வசதியை தொடங்கி, அதில் பெரும் வருமானம் ஈட்டுகிறார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

இந்த சுவாரஸ்யமான கதையை லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ரூபானி LinkedIn இல் பகிர்ந்து கொண்டார். இது இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்ட பதிவில், ''நான் அமெரிக்க தூதரகத்துக்கு சென்ற போது, அங்கு எனது பையை உள்ளே அனுமதிக்கவில்லை.

அங்கிருந்த ஓட்டுநர், பையை கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன், அதற்கு ரூ.1000 கட்டணம் என்றார்'' என பதிவிட்டுள்ளார். உடமைகளை ஆட்டோவில் வைத்து பாதுகாத்து சம்பாதிக்கிறார். இவர் தான் பிழைக்க தெரிந்தவர்! என்று பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒவ்வொரு நாளும், ஆட்டோ ஓட்டுநர் தூதரகத்திற்கு வெளியே நின்று பயணிகளின் பைகளை ரூ.1000க்கு பாதுகாப்பாக வைத்திருக்க முன்வருகிறார். ஒரு நாளைக்கு சுமார் 20-30 வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள். ,அப்படியெனால், தினமும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்கும். இதன் மூலம், மாதத்திற்கு ரூ.5 முதல் 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

இந்த ஆட்டோ ஓட்டுநர் தனது புரிதலையும் தேவையையும் மனதில் கொண்டு எந்த செயலி, நிதி அல்லது தொழில்நுட்பமும் இல்லாமல் இதைச் செய்கிறார். இந்த ஆட்டோ ஓட்டுநரின் வருமானத்தின் ரகசியம், அவர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நிற்கிறார் என்பதுதான்.

அவர் தனது ஆட்டோவில் சட்டப்பூர்வமாக 30 பைகளை வைத்திருக்க முடியாது என்பதால், அருகிலுள்ள ஒரு சிறிய லாக்கர் இடத்தை வைத்திருக்கும் உள்ளூர் வணிக உரிமையாளருடன் அவர் கூட்டு சேர்ந்துள்ளார். பைகள் அங்கே பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இப்படி செய்வது பாதுகாப்பானது, தொந்தரவு இல்லை. "இதுதான் உண்மையான தொழில்முனைவு. சரியான இடம், சரியான யோசனை மற்றும் கொஞ்சம் நம்பிக்கை" என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.