நாட்டையே உலுக்கிய விமான விபத்து: ''சாவை சமாளித்து உயிர் தப்பிய நபர்''.., நடந்தது என்ன.?
Author
gowtham
Date Published

குஜராத் :அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ் குமார் விமான விபத்தில், அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், ஆனால் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். விமானம் கீழே விழுந்ததும் உடனடியாக சுதாரித்த 38 வயது ரமேஷ் விஸ்வாஸ், அவசர கதவு வழியாக வெளியே குதித்து தப்பித்துள்ளார்.
நிச்சயம் அவருக்கு இது மறுபிறவி தான் என்று சொல்ல வேண்டும். இருக்கை எண் 11 A-வில் பயணம் செய்த ரமேஷ் விஸ்வாஸ் குமார் (38) காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு, கண்கள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11A இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு வலது பக்கத்தில் உள்ளது. விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே 11A இருக்கை அமைந்துள்ளது.
விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி சுதாரித்து விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் கூறியதாக தனியார் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
unknown nodeமேலும் விபத்தின் போது என்ன நடந்தது என்று விஸ்வாஸ் குமார், ஆங்கில செய்தித்தாளான ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பேட்டியளிக்கையில், "நான் கண் விழித்தபோது, என்னைச் சுற்றி சடலங்கள் கிடந்தன, நான் பயந்துவிட்டேன். நான் எழுந்து ஓடினேன், என்னைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் சிதறி கிடந்தன. புறப்பட்ட முப்பது வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது, எல்லாம் மிக விரைவாக நடந்தது'' என்று கூறியுள்ளார்.