‘தக் லைஃப்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி.! தமிழக அரசு கூறியது என்ன?
Author
gowtham
Date Published

சென்னை :இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் இந்த அனுமதி அறிவிப்பு, ரசிகர்களுக்கு படத்தை வெளியீட்டு நாளில் அதிக காட்சிகளில் கண்டு மகிழ ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இது படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.
அதேபோல், இப்படத்தை சட்டவிரோதமாக செயல்படும் 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிக்களில் வெளியிடவும் சென்னை ஐகோர்ட் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், 'தக் லைஃப்' திரைப்படம், கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அலி பசல், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'நாயகன்' படத்திற்குப் பிறகு 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மணிரத்னம் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட டிரெய்லர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.