Payload Logo
சினிமா

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

Author

gowtham

Date Published

ActorKrishna - DrugsCase

சென்னை :சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் 15 மணி நேரத்துக்கும் மேலாக விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வருவதால் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை, பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகி வந்தேன் என ஏற்கெனவே கூறியிருந்தார். அப்படி இருந்தும் போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், வங்கி பணப்பரிவர்த்தனை, செல்போன் எண்களில் உள்ள தொடர்புகள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மேலும் சில தகவல்களை காவல்துறை ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக பிரமுகர் பிரசாத்தையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் மேலும் சில சினிமா பிரபலங்கள் மற்றும் இளம் இசையமைப்பாளர் ஒருவரும் சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, கிருஷ்ணாவுக்கு ஒவ்வாமை மற்றும் இதயப் பிரச்சினை இருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் உள்ளன. இதனால், காவல்துறையினர் அவரது இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ஆனால், மருத்துவ பரிசோதனையில் நடிகர் கிருஷ்ணா போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.காவல் துறையில் அவர் கொடுத்த வாக்குமூலம் என்னவென்றால் ” எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. 2 இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன். இதனால் போதைப் பொருள் உபயோகிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

3 பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகி வந்தேன். 4 அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து நான் போதைப் பொருள் வாங்கிச் செல்வதாக தவறாக கூறியதாகவும், இது உண்மையல்ல'' என்றும் விளக்கினார்.முதலில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் அவரது நண்பர் பிரதீப் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முதலில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டார், பின்னர் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஆரம்பத்தில் கிருஷ்ணா தலைமறைவாக இருந்ததாகவும், அவரது செல்போன் முடக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கிருஷ்ணாவைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இறுதியாக, அவர் கேரளாவில் கைது செய்யப்பட்டு, சென்னை வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.