"துண்டு போட்டுக்கிட்டு வேஷம் போடுற போலி விவசாயி இல்லை நாங்க".. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
Author
bala
Date Published

சென்னை :ஈரோட்டில் இன்று வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். வருகை தந்த பிறகு கருதரங்கத்தை திறந்து வைத்துவிட்டு சில விஷயங்களையும் பேசினார். விழாவில் பேசிய அவர் " வேளாண்மையும் உழவர் நலனும் நம்முடைய முதன்மையான கவனத்துக்கு உரியவை. அதனாலதான் வேளாண் துறையோட பெயரை 'வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை'னு மாத்தியிருக்கோம்.
இது வெறும் பெயர் மாற்றம் இல்லை; நம்ம உழவர்களுக்கு மேம்பட்ட சேவைகளை, ஆதரவை கொடுக்கணும்ங்கிற நோக்கத்தோட செய்யப்பட்ட முக்கியமான முடிவு. இந்தக் கண்காட்சியில 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கிற அளவுக்கு 200-க்கும் மேல அரங்குகள் அமைச்சிருக்கோம். இதுபோல நிகழ்ச்சிகள் நம்ம விவசாயிகளை உற்சாகப்படுத்தவும், அவங்களுக்கு புது வழிகளை காட்டவும் நடத்தப்படுது" எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் " விவசாயிகளால் தான் நமக்கு உணவு கிடைக்குது, அதனால் தான் மக்கள் உடல் நலத்தோட வாழ்ந்துட்டிருக்காங்க. இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியா இருக்குறதுக்கு விவசாயிகள்தான் காரணம். ஆனா, மழையில் நனைந்து பயிர்கள் சேதமடையும்போது நம்ம விவசாயிகள் மிகவும் கவலையில் ஆழ்த்துவிடுகிறார்கள். எனவே, வேளாண்மைக்கு தனியா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆரம்பிச்சோம்.
இப்படி பார்த்து பார்த்து பல விஷயங்களை செய்வதால் தான் வேளாண்மையும் பெருகி இருக்கிறது. விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தோளில் துண்டு போட்டுக்கிட்டு வேஷம் போடுற போலி விவசாயி இல்லை நாங்க... கடந்த அதிமுக ஆட்சி எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சியா இருந்துச்சு.
அந்த ஆட்சியில விவசாயிகளோட தற்கொலை அதிகமாக நடந்தது. மத்திய அரசோட வேளாண் சட்டங்களை ஆதரிச்ச அதிமுகவை நீங்க தோற்கடிச்சீங்க. இதனாலதான் நாங்க ஆட்சிக்கு வந்தவுடனே வேளாண் துறையோட பெயரை 'வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை'னு மாத்தினோம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமையும். இதுக்கு நம்ம உழவர்கள் உறுதுணையா இருக்கவேண்டும்" எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.