Payload Logo
இந்தியா

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

Author

bala

Date Published

roja tvk vijay

திருப்பதி :ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசினார். திருப்பதியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற கட்சியைத் தொடங்கி, தமிழ்நாடு அரசியல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் அரசியல் பயணத்தைப் பற்றி அவர் ஆலோசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர் “விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், வரும்போது நல்ல எண்ணத்தோடு வர வேண்டும். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா மாதிரி இருக்க வேண்டும். சினிமாவில் இருந்து வருபவர்கள் ‘டைம்பாஸ்’ அரசியலுக்காக வருகிறார்கள். விஜய் அப்படி இருக்கக் கூடாது,” என்று கூறினார். இந்தக் கருத்து, விஜய்யின் அரசியல் பயணம் மக்கள் நலனுக்காகவும், நீண்டகால அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. மேலும், பேசுகையில் “தனக்கு பின்னால் வரும் மக்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி போராட வேண்டும். மக்களை நம்பி வருபவர்களை ஏமாற்றி விடக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார், “ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கி, அதன்பின் திடீரென அதைக் காங்கிரஸில் இணைத்துவிட்டார். அவரை நம்பி வந்தவர்கள் ரோட்டில் நிற்கிறார்கள். விஜய் அப்படி செய்யக் கூடாது,” என்று எச்சரித்தார். அதனை தொடர்ந்து “பவன் கல்யான் ஒரு நாள் ஷூட்டிங்கில் இருக்கிறார், இன்னொரு நாள் ஆன்மீக பயணம் என்று சென்றுவிடுகிறார். ‘டைம்பாஸ்’ அரசியலுக்கு வருகிறார்கள். விஜய் அப்படி இருக்கக் கூடாது,” என்று கூறினார். இந்த விமர்சனம், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் முழு நேர அர்ப்பணிப்பு இல்லாமல், பகுதி நேர அரசியலில் ஈடுபடுவதை ரோஜா ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்தியது.