Payload Logo
இந்தியா

விமான விபத்தில் விஜய் ரூபானி பலி! அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

Author

bala

Date Published

vijay rupani rip

அகமதாபாத் :நேற்று இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விமான விபத்தில் உயிரிழந்ததில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும்  ஒருவர்.  இவருடைய இறப்பு என்பது குஜராத் மக்களுக்கு மத்தியில் பெரிய  சோகத்தை ஏற்படுத்தியது. லண்டனில் இருக்கும் தன்னுடைய மகளை பார்க்க ஆசையாக அவர் விமானத்தில் சென்ற நிலையில் விபத்து சம்பவம் ஏற்பட்டு அவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பலரும் அவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இப்படியான சூழலில் விஜய் ரூபானி உயிரிழப்பு அவருடைய அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறி தான் நடந்திருக்கிறது.

ஏனென்றால், முதல்வர் விஜய் ரூபானி தன்னுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1206 என்ற என்னை தான் வைத்திருந்துள்ளார். தனது வாகன பதிவெண்களில் கூட அந்த எண்ணையே பயன்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக அவருடைய கார் மற்றும் பைக்கில் கூட  அவருடைய அதிர்ஷ்ட எண்ணாக 1206 என்ற எண் தான் இருந்திருக்கிறது.

அது மட்டுமில்லை நேற்று விமானத்தில் அவரது இருக்கை எண்ணும் கூட நம்பர் 12 ஆகவே இருந்துள்ளது. கடைசியில் சோகமாக 12.06 என்ற தேதியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். எனவே அவருடைய இறப்பில் அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.