Payload Logo
தமிழ்நாடு

''விஜய் எங்கள் வீட்டு பயன், தனித்து போட்டியிட தயார்'' - பிரேமலதா விஜயகாந்த்.!

Author

gowtham

Date Published

Premalatha Vijayakanth

சென்னை :தேமுதிக கட்சியின் மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கிளைக்கழகம் வரை நேரடியாக களத்திற்கு சென்று அனைவரும் பணியாற்ற வேண்டும்” பிரேமலதா கூறியுள்ளார்.

மேலும்,  ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,'' மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதிக் கொடுத்ததை அரசியல் நாகரிகம் கருதி காட்டாமல் உள்ளோம். கூட்டணி குறித்து அதிமுக மீது தேமுதிகவுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என பிரேமலதா கூறியுள்ளார்.

விஜய பிரபாகரனுடன் சேர்ந்து விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம். தேர்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு பயம் இல்லை. வரும் தேர்தலில் தனித்துப் போட்டியா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். 6 மாதங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளோம். தேமுதிக கூட்டணியில் உள்ளதாக அதிமுக கூறியது அவர்களின் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், ''தவெக தலைவர் விஜய், தங்கள் வீட்டுப் பையன் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிகவும், தவெகவும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, விஜய்யிடம்தான் இதுகுறித்து கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.