Payload Logo
தமிழ்நாடு

ஐஐடி-க்கு தேர்வான பழங்குடியின மாணவி.., 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி விஜய் பாராட்டு..!

Author

gowtham

Date Published

tvkvijay - studentsmeet

சென்னை :தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் இறுதிகட்ட நிகழ்வில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகளை வழங்கி வருகிறார். 4ஆம் கட்டமாக நடக்கும் நிகழ்வில் 39 தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு விஜய் பரிசளித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். மாணவி ராஜேஸ்வரி, ஜே.இ.இ (JEE) அட்வான்ஸ்ட் தேர்வில் அகில இந்திய அளவில் 417-வது இடத்தைப் பிடித்து, சென்னை ஐ.ஐ.டி-யில் (IIT Madras) உயர்கல்வி பயில தகுதி பெற்றவர்.

இந்த நிலையில், இவரது சாதனையைப் பாராட்டி, விஜய் இந்த ஊக்கத்தொகையை வழங்கினார். மேலும், ''மின்சாரம் கூட இல்லாமல் மெழுகுவர்த்தி விளக்கில் படித்து ராஜேஸ்வரி தேர்வு எழுதியுள்ளார்; கண்டிப்பாக ஒருநாள் விஞ்ஞானியாக மாறுவார்'' என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

2024-ல் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது. கல்வி, சமூக நீதி, மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, விஜய் தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இதுபோன்ற உதவிகளை அவர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.