பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.!
Author
gowtham
Date Published

சென்னை :குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர் சீனிவாசன். தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக அறியப்பட்ட இவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
ஜி.சீனிவாசனின் மறைவு குறித்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ஜி.சீனிவாசனின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் இன்று மதியம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
முரட்டுக்காளை, வாழ்வே மாயம், ஸ்ரீராகவேந்திரா, மனிதன், ராஜாதி ராஜா, உரிமை கீதம், ஐயா, வேங்கை உள்ளிட்ட தமிழ் படங்கள் உள்பட தெலுங்கு, மலையாள மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜா ஆவார்.