Payload Logo
தமிழ்நாடு

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” - விசிக தலைவர் திருமாவளவன்.!

Author

gowtham

Date Published

vck - mk stalin

புதுச்சேரி :விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி சென்றிருந்தார். அப்போது, நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "2026 தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் '' என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,'' விசிக சார்பில் "மதச்சார்பின்மை காப்போம்" பேரணி திருச்சியில் நடைபெற உள்ளது. அனைத்து தரப்பு சனநாயக சக்திகளும் இதில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். எண்ணற்ற பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

அவருடைய தலைமையில் இயங்கக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் மீண்டும் மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும் என்று பெரிதும் நம்புகிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்போடு திமுக தலைமையிலான கூட்டணி, மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.