Payload Logo
தமிழ்நாடு

பாமக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வடிவேல் ராவணன் நீக்கம்.!

Author

gowtham

Date Published

Anbumani Ramadoss

விழுப்புரம் :ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸும், பூந்தமல்லியில் அன்புமணியும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை நீக்கம் செய்து, மாநில மாணவரணி செயலாளராக இருந்த முரளி சங்கரை புதிய பொதுச்செயலாளராக நியமித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.  வடிவேல் ராவணன், அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கம் செய்துள்ளதோடு ராமதாஸ் விரைவில் பொதுக்குழுவை கூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது, திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் நடந்து வரும், ஆலோசனை கூட்டத்தில் ராமதாஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வடிவேல் ராவணன், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பாமக பொதுச் செயலாளர் காணவில்லை, செவன் ஸ்டார் ஹோட்டலில் இருந்து கொண்டிருப்பார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கூறிய நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வடிவேல் ராவணன் வருகை புரிந்துள்ளார்.

இதனிடையே, ராமதாஸ் அன்புமணி இருவரும் தனியாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஜிகே மணி வலியுறுத்தியுள்ளார். மேலும், பாமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், "கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும்'' என அன்புமணி பேசி வருகிறார்.