Payload Logo
உலகம்

ஈரான் 'அணுசக்தி' மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்.., பின்வாங்கும் அமெரிக்கா.!

Author

gowtham

Date Published

OperationRisingLion

இஸ்ரேல் :இஸ்ரேல் இன்று (ஜூன் 13) அதிகாலை ஈரானை தாக்குவதை உறுதி செய்துள்ளது. ஈரான் மீது திடீரென இஸ்ரேலிய விமானப்படைகள், 6 இராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.

உண்மையில் இஸ்ரேல், ''ஆபரேஷன் ரைசிங் லயன்'' என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைத்து தாக்குவது தான் இந்த நடவடிக்கையாக இருக்கும்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் வீசப்பட்ட குண்டுகளால் பல கட்டடங்கள் தீப்பற்றி எரியும் நிலையில், ஈரானின் வான்வழி மூடப்பட்டது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்படுள்ளது. இதனால், 2 நாடுகளுக்கு இடையே போர்மேகம் சூழ்ந்துள்ளது.

unknown node

தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,"Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை எங்கள் துணிச்சலான விமானிகள் ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை தாக்குகின்றனர். இப்போது செயல்படவில்லை எனில் நாங்கள் இங்கே இருக்கமாட்டோம்'' என்று எச்சரித்துள்ளார்.

unknown node

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில், "இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இஸ்ரேலிய நிர்வாகம் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முற்றிலும் அவசியமானால் தவிர, தேவை இல்லமால் வெளியே செல்ல வேண்டாம். நாட்டிற்குள் தேவையற்ற பயணத்தைத் தவிர்த்து, பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் இருக்க முயற்சி செய்யுங்கள்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ''ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய ஒருதலைபட்சமான தாக்குதலுக்கும் அமெரிக்காவும் தொடர்பில்லை. அங்கிருக்கும் அமெரிக்க படைகளை பாதுகாப்பதே எங்கள் முக்கிய நோக்கம். தற்காப்புக்காக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்காக ஈரான் அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக செயல்படவோ, படைகளை தாக்கவோ கூடாது'' என்று கூறியுள்ளார்.

unknown node