''எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்'' - அதிபர் டிரம்ப் புலம்பல்.!
Author
gowtham
Date Published

வாஷிங்டன் :நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும்'என்று கோரியிருந்தார். தற்பொழுது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விஷயத்தில் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவில், ''இந்தியா - பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும். பல நாடுகள் இடையே பதற்றத்தை தணிக்க உதவிய எனக்கு 5 முறை நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும்.
'காங்கோவிற்கும் ருவாண்டாவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை நான் மத்தியஸ்தம் செய்தேன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தினேன், செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தினேன், எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையிலான மோதலை நிறுத்தினேன், மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''ரஷ்யா-உக்ரைன் அல்லது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் போன்ற பெரிய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தாலும், தனக்கு இந்த விருது கிடைக்காது''. நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், அதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
unknown node