“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” - ஐ.நா. பொதுச்செயலாளர்.!
Author
gowtham
Date Published

ஈரான் :ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதில், பொதுமக்கள் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. அதே நேரம் 400 பேர் பலியானதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 3,056 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சுழலில், ஈரானின் அணு உலகைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் மிகுந்த கோபத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர்அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும்.
மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும். இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நேற்று நடந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், ''சண்டையை நிறுத்தவும், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த தீவிரமான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவும், உடனடியாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும் என்று குட்டெரெஸ் கேட்டுக்கொண்டார்.
மேலும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் அதை முழுமையாக மதிக்க வேண்டும். அனைத்து உறுப்பு நாடுகளும் ஐ.நா. சாசனத்தின் கீழ், உள்ள தங்கள் கடமைகள், சர்வதேச மனிதாபிமான சட்டம் உட்பட சர்வதேச சட்டத்தின் பிற விதிகளின்படி செயல்பட வேண்டும். அமைதியான தீர்வுக்கான எந்தவொரு முடிவுக்கும் ஆதரிக்க ஐ.நா. தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
unknown node