தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு - தமிழக அரசு.!
Author
gowtham
Date Published

சென்னை :துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, அவர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் விரைவில் தேறுவதற்கு தமிழக மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.