Payload Logo
தமிழ்நாடு

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

Author

gowtham

Date Published

thiruppur - accident

திருப்பூர் :பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக வேகம் அல்லது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், சாலையோரமாக நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கண்டைனர் லாரி விழுந்ததில் கண்டனர் லாரிக்கு அடியில் சிக்கி உள்ள பெண்களைமீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. விபத்து நிகழ்ந்தவுடன், உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, லாரியின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தாக உறுதி செய்யப்பட்டது. விபத்து காரணமாக, திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.இந்த விபத்து உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.