Payload Logo
தமிழ்நாடு

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

Author

gowtham

Date Published

tvk meeting

சென்னை :தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது.இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநில அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள். மாநில செயற்குழு என்பது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள், அரசியல் உத்திகள், தேர்தல் மூலோபாயங்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படலாம்.

அதன்படி, இந்த செயற்குழு கூட்டத்தில்கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

unknown node