த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!
Author
bala
Date Published

சென்னை :த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். த.வெ.க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொது நலப் பணிகள் மற்றும் கொண்டாட்டங்களை மேற்கொண்டு, இந்த நாளை சிறப்பித்தனர்.
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய அரசியல் தலைவர்கள் பற்றி பார்ப்போம். பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது " இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான, சகோதரர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
unknown nodeதமிழசை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் " நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்" எனவும் கூறியுள்ளார்.
unknown nodeடிடிவி தினகரன் "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.விஜய் அவர்கள் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
unknown nodeவானிதிஸ்ரீநிவாசன் "இன்று பிறந்த நாள் காணும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான, அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
unknown nodeநாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் " தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.
unknown nodeunknown node