ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ''விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை'' - எடப்பாடி பழனிசாமி.!
Author
gowtham
Date Published

சென்னை :அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டார்.
ஆதவ் அர்ஜூனா தனது பதிவில், ''தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக் அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறி வந்துவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக' தெரிவித்துள்ளார்.
இப்பொழுது, சென்னையில் செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்தும், ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவித்தது குறித்து விளக்கமளித்து கொண்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஆதவ் அர்ஜூனா பேச்சு தொடர்பான கேள்விக்கு,"ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை என்றும், 'அவரே மறுபடி டிவிட் செய்துவிட்டார்' என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.