Payload Logo
உலகம்

"அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

Author

gowtham

Date Published

Trump warns Iran

அமெரிக்கா :இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பல ஈரானிய இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் பல அணு ஆயுத இலக்குகளும் அடங்கும். இந்த விமானத் தாக்குதலில் முக்கியமான 20 ஈரானிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக, பிற்பகலில் இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி கொடுத்தது. ஈரான் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. இஸ்ரேலிய இராணுவம் அதாவது ஐ.டி.எஃப். அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாகக் கூறுகிறது. நேற்றைய தினம் ஈரானின் புஷேர் மாகாணத்தில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கின் இயற்கை எரிவாயு பதப்படுத்தும் பிரிவையும் இஸ்ரேல் தாக்கியது.

இதனிடையே, இந்த தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அமெரிக்காவைத் தாக்கினால், அதற்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்றும் ஈரானை எச்சரித்துள்ளார்.

முன்னதாக, தெஹ்ரானுக்கும் வாஷிங்டன் டிசிக்கும் இடையிலான ஆறாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஈரான் ரத்து செய்தது. இப்பொது, திடீரென இஸ்ரேல் ஈரான் மீது பயங்கர தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், ஈரான் அமெரிக்காவைத் தாக்கினால், அமெரிக்க இராணுவம் முழு பலத்துடன் தாக்கும் என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கை ஈரான் ஒருபோதும் நினைத்திருக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்கிற பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "ஈரான் மீதான இன்றிரவு தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஈரான் எந்த வகையிலும் அமெரிக்காவைத் தாக்கினால், அமெரிக்கா முழு இராணுவ பலத்துடன் அதைத் தாக்கும். ஈரான் இதற்கு முன்பு இதுபோன்ற நடவடிக்கையைக் கண்டதில்லை" என்று  குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் இராணுவ மோதலை பேச்சு வார்த்தை மூலமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் கூறியுள்ளார்.

unknown node