“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” - ட்ரம்ப் கேள்வி.!
Author
gowtham
Date Published

வாஷிங்டன் :இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை டொனால்ட் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார்.
இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தாக்குதல் குறித்து தனது ட்ரூத் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அதிபர் டிரம்ப், ''அமெரிக்க தாக்குதலில் ஈரானுக்கு மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நிலத்தடியில் இருக்கும் அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இப்போதைய ஈரான் அரசாங்கத்தால், ஈரானை சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை. ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது என டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். "'ஆட்சி மாற்றம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது ஈரான். அந்த நாடு அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பதே நமது தாக்குதலின் முக்கிய நோக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node