Payload Logo
கிரிக்கெட்

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

Author

gowtham

Date Published

IPLFinals

அகமதாபாத் :ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப் போட்டி தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான போட்டிக்கு முன்னதாக, ஆபரேஷன் சிந்தூரில் துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய ஆயுதப்படைகளுக்கு இந்திய விமானப்படையினர் மரியாதை செலுத்தியது.

ஆம்., மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடியே மிளிர்கிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதே போல் விண்ணிலும், போர் விமானங்கள் மூவர்ண புகையை வெளிப்படுத்தி பறந்தது ரசிகர்களை பரவசமடைய வைத்தது. மைதானத்திற்குள் இருந்த ரசிகர்களும் தங்களது அணியின் கொடியுடன், தேசியகொடியையும் ஏந்தியிருந்தனர்.

unknown node

அதன் பிறகு, இந்தியப் பாடகர் ஷங்கர் மகாதேவன் மேடையில் மற்ற கலைஞர்களுடன் சேர்ந்து இதயப்பூர்வமான நிகழ்ச்சியை வழங்கினார். "மெயின் ராகு யா நா ராஹு, பாரத் யே ரெஹ்னா சாஹியே" மற்றும் "மா துஜே சலாம்" உள்ளிட்ட தேசபக்தி பாடல்களைப் பாடி அசத்தினார்.

தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தளது. இதனால், முதலில் பெங்களூரு அணி அணி பேட்டிங் செய்து வருகிறது.