Payload Logo
இந்தியா

யாத்திரை சென்ற போது சோகம்.., கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 7 பேர் மரணம்.!

Author

gowtham

Date Published

Uttarakhand Helicopter Crash

உத்தரகாண்ட் :விமான விபத்து நடந்த 3 நாட்களுக்குள் தற்போது கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளனாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை 5.30 மணியளவில் கேதர்நாத்தில் இருந்து குப்தகாஷிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானி, பக்தர்கள் என 7 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபத்தைத் தொடர்ந்து, சார் தாம் பகுதியில் இயங்கும் ஹெலிகாப்டர் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவை UCADA (உத்தரகாண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம்) மற்றும் DGCA (சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) இணைந்து எடுத்துள்ளன.

விபத்துக்கு காரணம், அந்தப் பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறிச் சென்றதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள், ராஜ்வீர் - பைலட், விக்ரம் ராவத், வினோத், திரிஷ்டி சிங், ராஜ்குமா, ஷ்ரத்தா, ராஷி - 10 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது வருத்தத்தை தெரிவித்து தனது எக்ஸ் பதிவில், "ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. எஸ்.டி.ஆர்.எஃப், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிற மீட்புக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node