தமிழ்நாடு
தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!
Author
gowtham
Date Published

சென்னை :தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டைwww.tnpsc.gov.inஎன்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை TNPSC ஆல் வெளியிடப்படவில்லை. மேலும், கூடுதல் தகவல்களுக்கு TNPSC இணையதளத்தை () சென்று சரிபார்க்கவும்.